அநுராதபுரம் – நொச்சியாகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்தானது நேற்று (16) இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிள் ஒன்று பேருந்து ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
நொச்சியாகமயில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றும், குறித்த மாணவர்கள் சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த இரண்டு பாடசாலை மாணவர்களும் 16 வயதுடையவர்கள் என்று காலதிவுல்வெவ பொலிஸார் கூறியுள்ளனர்.