கொழும்பு வொக்ஷோல் வீதியில் அமைந்துள்ள இரண்டு கட்டிடங்களில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்து இன்றையதினம்(10) ஏற்பட்டுள்ளது.
இதன்போது, 6 தீயணைப்பு வாகனங்கள், கடமையில் ஈடுபடுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கட்டிடமொன்றில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.