மட்டக்களப்பு மாவட்ட விவசாயத் திணைக்களத்தின் பிரதி விவசாயப் பணிப்பாளரின் வழிகாட்டலின் படி வாகரை விவசாய போதனாசிரியர் பிரிவில் உள்ள ஆலங்குளம் பிரதேசத்தில் நெற் செய்கையில் உற்பத்தி திறனை அதிகரித்தல் தொடர்பான தொழில் நுட்ப விழிப்பூட்டல் நிகழ்வு இன்று (10) நடைபெற்றது.
இதன்போது விவசாயிகள் தங்களது விளைச்சலை அதிகரிப்பதற்கு ஏற்ற வகையில் சிறந்த விதைகளை எவ்வாறு தெரிவு செய்வது என்பது தொடர்பாகவும் முளை கட்டல் நாற்று மேடை தயாரிப்பு மற்றும் பரசூட் முறை மூலம் விதை பயிர் நடுகை மேற்கொள்வது தொடர்பான விடயங்கள் விவசாயிகளிடையே செயல் முறை பயிற்சி மூலம் நிகழ்த்தி காட்டினர்.

இவ் விழிப்புணர்வு நிகழ்வானது விவசாயிகளின் விளைச்சலை அதிகரிப்பதற்கும் தங்களது நீண்ட கால சந்தேகங்ளை தீர்த்துக்கொள்வதற்கும் வாய்ப்பாக அமைந்திருந்தாக நிகழ்வில் கலந்து கொண்ட விவசாயிகள் ஏற்பாட்டு குழுவினருக்கு நன்றி தெரிவித்தனர்.

இவ் நிகழ்வில் வடக்கு வலய விவசாய திணைக்கள உதவி விவசாயப் பணிப்பாளர் ஜ.எல்.பெசுல் அமின் கலந்து கொண்டு விரிவுரைகளை நிகழ்த்தினார்.
வலய விவசாய போதனாசிரியர்களும் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு நெற் செய்கையின் உற்பத்தி திறன் தொடர்பான தெளிவுபடுத்தலை மேற்கொண்டிருந்தனர்.











