இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவி வரும் போர் பதற்றம் குறித்து பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அறிவுரை வழங்கியுள்ளது.
போர் பதற்றத்தை தணிக்க வழிமுறைகளை கண்டறியும்படி பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அறிவுரை வழங்கியுள்ளதோடு மோதலை தவிர்க்க ஆக்கப்பூர்வ பேச்சுக்களை இரு நாடுகளும் மேற்கொள்ள வேண்டும் எனவும் பேச்சுவார்த்தைகளை தொடங்குவதற்கான உதவிகளை செய்ய அமெரிக்கா தயார் என்றும் பாகிஸ்தான் இராணுவத் தளபதியுடன் அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ பேசியுள்ளார்.