Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
போராட்டங்களில் ஈடுபட நேரிடும்; தபால் தொழிற்சங்க முன்னணி எச்சரிக்கை

போராட்டங்களில் ஈடுபட நேரிடும்; தபால் தொழிற்சங்க முன்னணி எச்சரிக்கை

2 years ago
in செய்திகள்

தபால் ஊழியர்களின் தொழில் பிரச்சினைகளை தீர்ப்பதில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்தாவிடின் போராட்டங்களில் ஈடுபட நேரிடும் என ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 19ஆம் திகதிக்கு பின்னரும் தமது பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்காவிடின் முன்னறிவிப்பின்றி தொழில் ரீதியாக நடவடிக்கை எடுக்க நேரிடும் என முன்னணியின் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.

கொழும்பில் நேற்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்கள் இதனைத் தெரிவித்தனர்.

தபால் ஊழியர்களின் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு மக்கள் விடுதலை முன்னணியின் தபால் தொழிற்சங்கப் பிரதிநிதிகளே ஆரம்ப முன்னோடிகளாக திகழ்வதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார இங்கு தெரிவித்தார். இதன் காரணமாக தற்போதைய அரசாங்கத்திற்கு முன்னர் சம்பளம் தொடர்பாக வழங்கப்பட்ட முன்மொழிவுகள் இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் அமுல்படுத்தப்படும் என நம்புவதாகவும் அவர் கூறினார்.

கடந்த 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் தபால் திணைக்கள ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படவில்லை எனவும், அந்த வருடத்தின் பின்னர் சம்பளத்துடன் கொடுப்பனவுகள் இணைக்கப்பட்ட போதிலும் தபால் ஊழியர்கள் ஓய்வுபெறும் போது கொடுப்பனவுகள் கிடைக்கப்பெறுவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தபால் துறையில் 2,000 அதிகாரிகள் மற்றும் 4,000 இளநிலை பணியாளர்கள் காலியாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.

தபால் ஊழியர்களின் சம்பளப் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால் தற்போதைய அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதில் சிக்கல் நிலை ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் தமது கருத்துக்களுக்கு அமைவாக செயற்படுமாயின் தொழிற்சங்கங்கள் முன்னைய போக்கை மறந்து புதிய போக்கை எடுத்தால் நாட்டில் மீண்டும் கோட்டாபய ராஜபக்ஸ யுகம் உருவாக அதிக காலம் எடுக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தபால் திணைக்களத்தில் உள்ள வெற்றிடங்களுக்கு உடனடியாக ஆட்சேர்ப்பு நடத்தப்பட வேண்டுமென தபால் தொழிற்சங்க பிரதிநிதிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.

ஊடகங்கள் தமது கருத்துக்களை முன்வைப்பதைத் தடுக்க தற்போதைய அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும், தொழிற்சங்கமாக ஊடக நிறுவனங்களுக்கும் ஆதரவளிப்பதாகவும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு
செய்திகள்

இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு

September 17, 2026
யோஷித, கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு முன் விசாரணை மாநாட்டிற்காக ஒத்திவைப்பு!
செய்திகள்

யோஷித, கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு முன் விசாரணை மாநாட்டிற்காக ஒத்திவைப்பு!

September 17, 2026
மன்னார் மருத்துவமனையில் தாதியர்களுடன் ‘செல்ஃபி’ எடுத்த ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க!
செய்திகள்

மன்னார் மருத்துவமனையில் தாதியர்களுடன் ‘செல்ஃபி’ எடுத்த ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க!

September 17, 2026
மட்டக்குளி விபத்து – கார் சாரதி 30ஆம் திகதி வரை விளக்கமறியலில்!
செய்திகள்

மட்டக்குளி விபத்து – கார் சாரதி 30ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

September 17, 2026
டிட்வா சூறாவளி பாதிப்பு; வீட்டு வாடகைக் கொடுப்பனவு 2026 டிசம்பர் வரை நீடிப்பு
செய்திகள்

டிட்வா சூறாவளி பாதிப்பு; வீட்டு வாடகைக் கொடுப்பனவு 2026 டிசம்பர் வரை நீடிப்பு

September 17, 2026
நாராஹென்பிட RMV வளாகத்தில் தரகர் மாஃபியா ஒழிப்பு; பொலிஸார் அதிரடி நடவடிக்கை!
செய்திகள்

நாராஹென்பிட RMV வளாகத்தில் தரகர் மாஃபியா ஒழிப்பு; பொலிஸார் அதிரடி நடவடிக்கை!

September 17, 2026
Next Post
பாடசாலைக்குள் கவுன் அணிந்து வந்த ஆசிரியைகள்; திரும்பிப் போக சொன்ன அதிபருடன் முரண்பாடு

பாடசாலைக்குள் கவுன் அணிந்து வந்த ஆசிரியைகள்; திரும்பிப் போக சொன்ன அதிபருடன் முரண்பாடு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு