Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
குருந்தூர் மலை ஆர்ப்பாட்டம் தொடர்பில் ரவிகரன் உள்ளிட்ட தரப்புக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

குருந்தூர் மலை ஆர்ப்பாட்டம் தொடர்பில் ரவிகரன் உள்ளிட்ட தரப்புக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

2 years ago
in செய்திகள்

முல்லைத்தீவு – குருந்தூர்மலையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதற்காக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டமை தொடர்பான வழக்கில், பிரதிவாதிகள் மூவரும் நீதிமன்றால் அழைப்பு விடுக்கும்வரை முன்னிலையாக தேவையில்லை என உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேவேளை இந்த வழக்குடன் தொடர்புடைய முன்னிலையாகாத நபர்களை மன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு நீதிமன்று உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு நேற்று (16) விசாரணைக்காக எடுத்து கொள்ளப்பட்டபோதே நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குருந்தூர்மலையில் கடந்த 2022.06.12 அன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மக்களோடு கலந்துகொண்டமைக்காக தொல்லியல் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் கரைதுறைப்பற்று பலநோக்குக் கூட்டுறவுச்சங்கங்களின் தலைவர் இ.மயூரன் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டு பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் வழக்கிலக்கம் பி1053/22 என்னும் குறித்த வழக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில், நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

அந்தவகையில் தொல்லியல் திணைக்களத்தால் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சார்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் கரைதுறைப்பற்று பலநோக்கு கூட்டுறவுச்சங்கத் தலைவர் இ.மயூரன் உள்ளிட்ட மூவர் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

இந் நிலையில் வழக்கினை ஆராய்ந்த நீதவான், மன்றில் முன்னிலையாகிய மூவரும் நீதிமன்றால் அழைப்பு விடுக்கும்வரை, நீதிமன்றில் முன்னிலையாக தேவையில்லை என உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

வெளிநாட்டு ஊழியர்களே நாட்டின் பொருளாதார முதுகெலும்பு; சஜித்
செய்திகள்

வெளிநாட்டு ஊழியர்களே நாட்டின் பொருளாதார முதுகெலும்பு; சஜித்

August 6, 2026
கிண்ணியாவில் 357 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது!
செய்திகள்

கிண்ணியாவில் 357 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது!

August 6, 2026
இலங்கையில் டெங்கு நோயாளர்கள் 88 ஆயிரத்தை கடந்தனர்; 63 உயிரிழப்புகள் பதிவு!
செய்திகள்

இலங்கையில் டெங்கு நோயாளர்கள் 88 ஆயிரத்தை கடந்தனர்; 63 உயிரிழப்புகள் பதிவு!

August 6, 2026
நெடுந்தீவு கடற்பரப்பில் விபத்துக்குள்ளான இந்திய படகு; 11 மீனவர்களை மீட்கும் பணியில் இலங்கை கடற்படை!
செய்திகள்

நெடுந்தீவு கடற்பரப்பில் விபத்துக்குள்ளான இந்திய படகு; 11 மீனவர்களை மீட்கும் பணியில் இலங்கை கடற்படை!

August 6, 2026
கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் பிரதி மாகாண ஆணையாளராக வைத்தியர் அன்டன் அனஸ்டீன் கடமையேற்பு
செய்திகள்

கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் பிரதி மாகாண ஆணையாளராக வைத்தியர் அன்டன் அனஸ்டீன் கடமையேற்பு

August 6, 2026
பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை
செய்திகள்

பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

August 6, 2026
Next Post
கரண்டியை சூடாக்கி காலில் வைத்தார்கள்; அனுபவித்த கொடுமைகளை வெளிப்படுத்திய ஓமானிலிருந்து வந்த மட்டு பெண்

கரண்டியை சூடாக்கி காலில் வைத்தார்கள்; அனுபவித்த கொடுமைகளை வெளிப்படுத்திய ஓமானிலிருந்து வந்த மட்டு பெண்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு