சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் ஜனவரி முதல் வாரத்தில் திருடிச்செல்லப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் குறிப்பிட்டனர்.
சம்பவம் தொடர்பில் திருடிச்செல்லப்பட்ட மோட்டார் சைக்கிள் உரிமையாளரினால் அன்றைய தினம் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
குறித்த முறைப்பாட்டிற்கமைய விசாரணைகளை மேற்கொண்ட சம்மாந்துறை பொலிஸார் பொத்துவில் பிரதேசத்தில் குறித்த மோட்டார் சைக்கிள் உட்பட சந்தேகநபரையும் கைது செய்துள்ளனர்