கடந்த ஆண்டில் மட்டும் 360 பத்திரிகையாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டதாக நியூயோர்க்கை மையமாகக் கொண்டு செயல்படும் சி.பி.ஜே.,
( Committee to Protect Journalists ) என்ற அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
உலகம் முழுவதும் பத்திரிகையாளர்கள் பல்வேறு விடயங்களுக்காக எழுதி வருகின்றனர். இதில் குறிப்பாக இலஞ்ச ஒழிப்பு, வெளியே தெரியாமல் நடக்கும் சட்ட விரோதச் செயல்கள், இயற்கைக்கு இடையூறு விளைவிக்கும் செயற்பாடு , மேலும் பருவகால மாற்றம் தொடர்பான பாதிப்புகள் குறித்து எழுதி வருகின்றனர். இது போன்று எழுதுபவர்கள் மட்டுமே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகில் அதிகபட்சமாக சீனா, இஸ்ரேல், மியான்மர் நாட்டில் முறையே 50, 43, 55 பேர் அவர்கள் செய்த பணி தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சீனாவில் பத்திரிகையாளர்கள் பலர் சிறையில் அடைக்கப்பட்டாலும் இதனை வெளியே அறிய விடாமல் அந்நாட்டு அரசு கவனமாக கையாள்கிறது. பிரபல பத்திரிகையாளர் தைகூன் ஜிம்மிலாய் ஹாங்காங் சிறையில் நீண்ட காலமாக அடைக்கப்பட்டுள்ளார்