Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நீதித்துறையிலிருந்து ஓய்வுபெற்றார் நீதிபதி இளஞ்செழியன்

நீதித்துறையிலிருந்து ஓய்வுபெற்றார் நீதிபதி இளஞ்செழியன்

2 years ago
in செய்திகள்

தமிழ் நீதிபதியான நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் நீதிபதியாக 27 ஆண்டுகளை பூர்த்தி செய்கிற நிலையில் அவர் நேற்று (18) நீதித்துறையில் இருந்து ஓய்வு பெற்றார்.

05.02.1997 நீதிபதியாக நியமனம் பெற்று வவுனியாவில் தனது முதல் நியமனத்தை நீதவானாக ஆரம்பித்து 05.02.2024 27 ஆண்டுகளை பூர்த்தி செய்த முதல் தமிழ் நீதிபதி என்ற சிறப்பிற்குரியவராகிறார்.

இன்றைய வடக்கு – கிழக்கு மாகாண அனைத்து நீதிபதிகளிலும் 25 ஆண்டுகளை பூர்த்தி செய்த முதல் பெருமைக்குரிய தமிழ் நீதிபதியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

1999 இல் யாழ். செம்மணி புதைகுழி வழக்கு. 1999 இல் மன்னாரில் காமாலிக்கா கொலை வழக்கு, மடு தேவாலய குண்டு வெடிப்பு வழக்கு, மற்றும் லயன் எயார் குண்டு வெடிப்பு வழக்கு. 2000 – 2008 ஒன்பது ஆண்டுகள் கடுமையான யுத்தம் நிலவிய காலப்பகுதியில் வவுனியாவில் நீதிபதியாக கடமையாற்றியமை.

ஜெயசிக்குறு தாக்குதல் காலம், யுத்த நிறுத்த காலம், மீண்டும் இறுதி யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட யுத்த காலத்தில் வவுனியா நீதிபதியாக கடமையாற்றினார்.

2006 இல் வவுனியா விவசாயக் கல்லூரி மாணவர்கள் கொலை வழக்கு. 2008 இல் மேல் நீதிமன்ற ஆணையாளராக நியமிக்கப்பட்டமை.

2009 இல் திருகோணமலை கோயில் குருக்கள் மனைவி கொலை வழக்கில் மரண தண்டனை வழங்கியமை, அந்த கொலை வழக்கு தீர்ப்பு உயர் நீதிமன்றம் வரை சென்று தீர்ப்பு உறுதிப்படுத்தப்பட்டமை.

2014 இல் கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமனம். 2015 இல் கணவர் கொலை கொலை வழக்கில் இஸ்லாமிய பெண்ணிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டமை, தீர்ப்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்பட்டமை.

2015 இல் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமனம் பெற்று மூவர் அடங்கிய தீர்ப்பாயத்தில் 1 நீதிபதியாக வித்தியா கொலை வழக்கில் தனித் தீர்ப்பு எழுதி மரண தண்டனை விதித்தமை.

2018இல் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் பெற்று யாழ். இளைஞன் கொலை வழக்கில் இரு இராணுவ அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதித்தமை.

2022 இல் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டு, தயா மாஸ்டர் வழக்கில் இரு வருடம் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கி விடுதலை செய்தமை உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவை.

27 வருட காலப் பகுதியில் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மேற்குறித்த முக்கிய வழக்குகளுக்கான தீர்ப்புக்களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு ராமர் பாலத்துடன் தொடர்புடைய 3வது மணல் திட்டை நோக்கி பயணம்!
செய்திகள்

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு ராமர் பாலத்துடன் தொடர்புடைய 3வது மணல் திட்டை நோக்கி பயணம்!

September 25, 2026
“ஹோர்முஸ் பாதுகாக்க ஈரானுடன் மோத தயார் பிரான்ஸ் அதிரடி!
உலக செய்திகள்

“ஹோர்முஸ் பாதுகாக்க ஈரானுடன் மோத தயார் பிரான்ஸ் அதிரடி!

September 25, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் 95 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றில் நிறைவேற்றம்!
செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் 95 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றில் நிறைவேற்றம்!

September 25, 2026
நாட்டில் மேலும் 20 காடுகளுக்கு பாதுகாப்பு; 9,538 ஹெக்டேயர் வனப்பகுதி வர்த்தமானியில்
செய்திகள்

நாட்டில் மேலும் 20 காடுகளுக்கு பாதுகாப்பு; 9,538 ஹெக்டேயர் வனப்பகுதி வர்த்தமானியில்

September 25, 2026
இலஞ்சம் கொடுக்க முயன்ற முன்னாள் பிரதிமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி கைது
செய்திகள்

இலஞ்சம் கொடுக்க முயன்ற முன்னாள் பிரதிமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி கைது

September 25, 2026
நாமல் ராஜபக்ஷவுடன் புகைப்படம் எடுத்த ஆளும் கட்சி எம்.பிக்கள்; பாராளுமன்றத்தில் சர்ச்சை
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுடன் புகைப்படம் எடுத்த ஆளும் கட்சி எம்.பிக்கள்; பாராளுமன்றத்தில் சர்ச்சை

September 25, 2026
Next Post
ஜனாதிபதியின் அடுத்த வெளிநாட்டு விஜயம் அமெரிக்காவிற்கானது; கே.டி. லால்காந்த அறிவிப்பு

ஜனாதிபதியின் அடுத்த வெளிநாட்டு விஜயம் அமெரிக்காவிற்கானது; கே.டி. லால்காந்த அறிவிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு