மட்டக்களப்பு இந்து கல்லூரியின் 79 ஆவது ஆண்டினை சிறப்பிக்கும் முகமாக கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினால் நேற்று (18)காலை 07.00 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்ட வாகனம் கழுவுதல் 2025 இனை கல்லூரியின் பழைய மாணவரும், பழைய மாணவர் சங்க நிர்வாக உறுப்பினரும் கௌரவ மாநகர சபை ஆணையாளருமான N. தனஞ்செயன் அவர்களும், கல்லூரி அதிபர் K. பகீரதன் அவர்களும் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.
மேலும், கல்லூரியின் முன்னாள் அதிபர் Mrs. R. கனகசிங்கம் அவர்களும், முன்னாள் பிரதி அதிபர்களான Mr. A. சுகுமாரன், Mr. V. பஞ்சலிங்கம் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் மேற்படி நிகழ்வின் அனுசரணையாளர்களான V.P. விமல்ராஜன் புதிய Shanika motor Tvs விற்பனை சேவை உதிரி பாகங்கள் அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப் மட்டக்களப்பு, ஷிரோனி பிரிண்டர்ஸ் ஆகியோரும் பழைய மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.