கல் ஓயாவின் கரைகள் இடிந்து விழுந்ததன் காரணமாக அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கல் ஓயாவை அண்மித்துள்ள பகுதியில் உள்ள சுமார் 600 ஏக்கர் நெற்பயிர் செய்கை நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவற்றில் பல வயல்களில் பயிர்கள் அறுவடை செய்யப்பட்டுவிட்டதாகவும், அறுவடைக்கு அருகில் உள்ள பல வயல்களும் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் கல் ஓயாவின் கரைகள் அழிக்கப்பட்டு, அந்த நிலத்தில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டதால் இந்த துயரத்தை எதிர்கொள்ள நேரிட்டதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கடந்த வருடத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கல் ஓயா ஆற்றின் கரைகள் உடைந்தன. பின்னர் பழுதுபார்க்கப்பட்ட அணைக்கட்டு 2024 ஆம் ஆண்டு வெள்ளத்தில் மீண்டும் உடைந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.