சட்டவிரோத மணல் அகழ்வு சம்பவத்தின் பின்னணியில் இரண்டு பிரபல அரசியல்வாதிகள் இருப்பதாக பெருந்தோட்ட மற்றும் கிராமப்புற உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று (21) கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
சிலாபம் மணல் நிறுவனத்திற்குச் சொந்தமானதாகக் கூறப்படும் பகுதியில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மணல் அகழ்வு செய்யப்பட்டுள்ளது.
இது ஒரு பாரிய மோசடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, விசாரணைகள் நடந்து வருகின்றன.
மேலும் சுமார் 400 மில்லியன் ரூபாய் மதிப்பிலான மோசடி பரிவர்த்தனை நடந்துள்ளதாக முதற்கட்ட கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன.
இந்த மோசடிக்கு இறுதிப் பொறுப்பான தரப்பினரை அடையாளம் காண்பது கடினம் என்று அமைச்சர் கூறினார்.
இருப்பினும், இரண்டு முக்கிய அரசியல்வாதிகளை இந்த சம்பவத்துடன் தொடர்புபடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலதிகமாக, பல ஒப்பந்தக்காரர்களும் இதில் ஈடுபட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.