Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு 3,000 ரூபா வவுச்சர்; அமைச்சரவை அங்கீகாரம்

தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு 3,000 ரூபா வவுச்சர்; அமைச்சரவை அங்கீகாரம்

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு, பிரிவெனாக்களிலுள்ள பௌத்த துறவு மாணவர்கள் மற்றும் ஏனைய மாணவர்களுக்கான பாடசாலை பாதணி வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் குழுவின் விதந்துரைக்கமைய கீழ்வரும் பாடசாலை மாணவர்கள், பௌத்த துறவு மாணவர்கள் மற்றும் ஏனைய மாணவர்களுக்குப் பாதணிகளைக் கொள்வனவு செய்வதற்கான 3,000/- ரூபா வவுச்சர் ஒன்றை வழங்குவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று(20) நடைபெற்ற அடைச்சரவையில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கே இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

  • 250 மாணவர் தொகைக்குக் குறைவான பாடசாலைகளில் கல்வி பயிலும் 650,000 மாணவர்களுக்கும்
  • 250 மாணவர் தொகைக்குக் குறைவான பாடசாலை வகையைச் சாராத நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள தோட்டப்பாடசாலை மாணவர்கள் 140,000 பேருக்கும்
  • விசேட தேவையுள்ள மாணவர்கள் கல்வி பயில்கின்ற 28 பாடசாலைகளிலுள்ள 2300 மாணவர்களுக்கும்
  • பிரிவெனாக்களில் கல்வி பயில்கின்ற 30,000 பௌத்த துறவு மாணவர்கள் மற்றும் ஏனைய மாணவர்களுக்கும்

2015 ஆம் ஆண்டு தொடக்கம் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பாடசாலைப் பாதணி வழங்கும் வேலைத்திட்டம் கல்வி அமைச்சின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டு தொடக்கம் 2023 ஆம் வரைக்கும் தெரிவுசெய்யப்பட்டுள்ள பிரிவெனாக்களிலுள்ள பௌத்த துறவு மாணவர்கள் மற்றும் ஏனைய மாணவர்களும் குறித்த வேலைத்திட்டத்தில் உட்சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேசமயம் தற்போது 1-5 வரையான வகுப்புக்களில் மாணவர்கள் தொகை 100 இற்கும் குறைவான அனைத்து அரச பாடசாலைகளிலுள்ள மாணவர்களுக்கும், விசேட கல்விப் பிரிவு அல்லது விசேட கல்விப் பாடசாலைகளிலுள்ள மாணவர்கள் மற்றும் தெரிவுசெய்யப்பட்ட பிரிவெனாக்களிலுள்ள மாணவர்கள் உள்ளடங்கலாக 1.4 மில்லியன் மாணவர்களுக்கு நாடளாவிய ரீதியிலுள்ள 100 கல்வி வலயங்களில் 8,956 பாடசாலைகளில் ‘பாடசாலை உணவு வேலைத்திட்டம்’ நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
Next Post
வாழைச்சேனை வயல் பிரதேசமொன்றில் வெள்ளத்தில் சிக்கியிருந்த 16 விவசாயிகள் மீட்பு

வாழைச்சேனை வயல் பிரதேசமொன்றில் வெள்ளத்தில் சிக்கியிருந்த 16 விவசாயிகள் மீட்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு