வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கிடைச்சிமடு, ஆத்துச்சேனை வயல் பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கிய 16 விவசாயிகளை இன்று செவ்வாக்கிழமை (21) கல்குடா அனர்த்த அவசர சேவை மீட்பு அணியினால் மீட்கப்படு கரைசேர்க்கப்பட்டுள்ளனர்.
குறித்த பிரதேசத்திலுள் வயல் பிரதேசத்தில் வேளாண்மை நடவடிக்கைகளுக்கு திங்கட்கிழமை விவயாயிகள் சென்ற நிலையில் வயல்கள் பாதைகள் வெள்ளத்தில் மூழ்கியதையடுத்து, அவர்களை மீட்பதற்கான நடவடிக்கையினை சமூக செயற்பாட்டாளரும், கல்குடா டைவர்ஸின் ஆலோசகருமான முபாறக் ஹாஜியார், கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலாளர் ஏ.தாஹிரின் மற்றும் பிரதேச சபையின் செயலாளர் எஸ்.எம்.சஹாப்தீன், கவனத்திற்கு கொண்டுவந்தார்
இதனையடுத்து கல்குடா அனர்த்த அவசர சேவை மீட்பு அணியினர் இயந்திர படகுமூலம் குறித்த வயல்பிரதேசங்களுக்கு சென்று 16 விவசாயிகளை மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர்.