வாகனத்தின் உரிமையை மாற்றும்போது அல்லது மாகாணங்களை மாற்றும்போது பயன்படுத்தப்படும் மாகாண எழுத்துக்களை இனி நீக்கவோ அல்லது மாற்றவோ தேவையில்லை என்று மோட்டார் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
எதிர்காலத்தில், புதிய வாகனங்களைப் பதிவு செய்தாலோ, தொலைந்து போன அல்லது பயன்படுத்த முடியாத எண் தகடுகளுக்கோ அல்லது ஏதேனும் காரணத்திற்காக ஒரு தனிநபர் கோரும் போது மட்டுமே வாகன எண் தகடுகள் வழங்கப்படும் என்றும் போக்குவரத்துத் துறை மேலும் கூறியுள்ளது.