கொழும்பு துறைமுகத்தில் அமைந்துள்ள டொக்யாட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட (cable Laying and Repair vessel) – SOPHIE GERMAIN கப்பலை துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று (27) பார்வையிட்டார்.
பிரான்ஸின் ஒரேஞ் மெரைன் (Orange Marine) நிறுவனத்துக்காக தயாரிக்கப்பட்ட இந்த கப்பல் கடற்பரப்பில் கேபிள் விளக்குகள், கப்பல் கட்டுமானம் மற்றும் புதுப்பித்தல் பணிகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளது.
இது 100 மீற்றர் நீளமும் 18.80 மீற்றர் அகலமும் உடைய கப்பலாகும்.
இதனை தயாரித்ததன் மூலம் இலங்கைக்கு அந்நிய செலாவணியாக 50 மில்லியன் யூரோ வருமானம் கிடைத்துள்ளதாக கப்பலை பார்வையிட்ட அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவிடம் ‘களம்பு டொக்யாட்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.