Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
முன்னாள் ஜனாதிபதி மைத்திரி அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை

1 year ago
in செய்திகள்

பொலன்னறுவை மாவட்டத்தில், கனமழை காரணமாக விவசாய நிலங்கள் மற்றும் சொத்துக்கள் சேதமடைந்துள்ளமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த அறிக்கை மூலம் அவர், அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் முறையான ஒரு திட்டத்தை செயல்படுத்தத் தவறியதே பொலன்னறுவை மாவட்டத்தின் தற்போதைய நிலைக்கு காரணம் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், மொரகஹகந்த மற்றும் களுகங்கை நீர்த்தேக்கங்களில் இருந்து சேகரிக்கப்படும் நீர் பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள மினிபே நீர்த்தேக்கத்திற்கு மாத்திரமே செல்வதால், 2019ஆம் ஆண்டில், மொரகஹகந்த நீர்த்தேக்கத்தில் இருந்து அனுராதபுரம் மற்றும் வடமேல் மாகாணத்தின் பகுதிகளுக்கு நீரைக் கொண்டு செல்வதற்காக 15 – 20 கிலோமீற்றர் கால்வாயை அமைத்து, கட்டுமானப் பணிகளை மேற்கொண்டனர்.

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரை வடமேல் மற்றும் அனுராதபுரத்திற்கான கால்வாய்களின் பணிகள் அப்போது நடைபெற்று வந்தன. ஆனால் அதனை தொடர்ச்சியாக அரசாங்கங்கள் செயல்படுத்தவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 2019 முதல் 2024 வரை வடமேல் பகுதிக்கும் அனுராதபுரத்திற்கும் செல்லும் முக்கிய கால்வாய்கள் வெட்டப்பட்டிருந்தால், பொலன்னறுவை இவ்வளவு பேரழிவை சந்தித்திருக்காது என மைத்திரிபால சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், தற்போதைய அரசாங்கம் இந்த விடயத்தில் கவனம் செலுத்தி, அனுராதபுரம் மற்றும் வடமேல் மாகாணத்திற்கு நீரை கொண்டு செல்லும் கால்வாய்களை நிர்மாணிக்கத் தொடங்கினால், பொலன்னறுவையை இத்தகைய அழிவில் இருந்து மீட்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, அனுராதபுரம் மற்றும் வடமேல் மாகாணத்திற்குச் செல்லும் கால்வாய்கள் உடனடியாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

செம்மணி புதைகுழியில் மேலும் 14 என்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!
செய்திகள்

செம்மணி புதைகுழியில் மேலும் 14 என்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!

June 17, 2026
எரிபொருள் விலை எப்போது குறையும்? பதிலளித்தார் அனில் ஜயந்த!
செய்திகள்

எரிபொருள் விலை எப்போது குறையும்? பதிலளித்தார் அனில் ஜயந்த!

June 17, 2026
திருமண மண்டபத்தில் மோதல்; பொலிஸாரை தாக்கிய 7 பேர் கைது!
செய்திகள்

திருமண மண்டபத்தில் மோதல்; பொலிஸாரை தாக்கிய 7 பேர் கைது!

June 17, 2026
ஈரான் மீள்கட்டமைப்புக்கு 300 பில்லியன் டொலர் முதலீட்டு நிதி!
உலக செய்திகள்

ஈரான் மீள்கட்டமைப்புக்கு 300 பில்லியன் டொலர் முதலீட்டு நிதி!

June 17, 2026
அஸ்வெசும் பயனாளிகளுக்கு ஜூன் மாத கொடுப்பனவு நாளை வங்கி கணக்குகளில்!
செய்திகள்

அஸ்வெசும் பயனாளிகளுக்கு ஜூன் மாத கொடுப்பனவு நாளை வங்கி கணக்குகளில்!

June 17, 2026
கண்டி – தெல்தெனியாவில் காரிலிருந்து பெண் சடலம் மீட்பு; விசாரணை ஆரம்பம்!
செய்திகள்

கண்டி – தெல்தெனியாவில் காரிலிருந்து பெண் சடலம் மீட்பு; விசாரணை ஆரம்பம்!

June 17, 2026
Next Post
20,000 ரூபா இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் கைது

20,000 ரூபா இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு