இனவாதத்தின் கடைசி ஆயுதத்தை கையாளும் அரசியல் வறுமையில் மஹிந்த ராஜபக்ஸ
புலம் பெயர் தமிழர்களை மகிழ்சிப்படுத்த எனது வசதிகள் , அநுரவால் பறிக்கப்படுகின்றன என மஹிந்த ராஜபக்ஸ , தனது கடைசி இனவாத ஆயுதத்தை கையிலெடுத்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸ தனது தவறுகளிலிருந்து தப்ப இனவாதத்தை மீண்டும் கையிலெடுத்திருப்பது அவரது அரசியல் வறுமையையும் , மோசமான கடைசி அத்தியாயத்தையும் வெளிப்படுத்துகிறது.
இதனால் உள்ள அனுதாபமும் இல்லாமல் போகும். இனவாதம் பேசும் அனைவருக்கும் மஹிந்த ராஜபக்ஸவை நிராகரிப்பது ஒரு பாடமாக வேண்டும்.
மார்க்ஸ் கூறியது: “மக்களின் மத்தியில் எந்த மதவாதமும் அல்லது இனவாதமும் இருக்கக்கூடாது. மக்களிடையே இருக்கும் பொருளாதார சமநிலைதான் நியாயம்.”
இனவாதத்தை கம்யூனிசம் எப்படி எதிர்க்கும்?
உழைக்கும் மக்கள் ஒரே அடையாளத்தின் கீழ் ஒன்றுபட வேண்டும்.
மத, இன, மற்றும் கலாச்சார அடிப்படையிலான அரசியல் தூண்டுதல்களை கண்டித்து, அனைத்து இனங்களும் சமமாக கருதப்பட வேண்டும்.
கம்யூனிசம் அனைத்து தனிப்பட்ட அடையாளங்களை, சமூகநீதியின் அடிப்படையில் ஒழுங்கமைக்கும்.