மட்டக்களப்பில் வர்த்தகரும், தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி உறுப்பினருமான அழதையா தேவகுமாரால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைக்கப்பட்டது.

தனது சொந்த நிதியில் இருந்து வந்தாறுமூலை மாவடிவேம்பு பிரதேசத்திலுள்ள வறிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்க்கே இது வழங்கப்பட்டது.
நேற்றுமுன்தினம் (26) நடைபெற்ற இந்த நிகழ்வில் 100 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.