நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், காத்தான்குடி நகர சபையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் காத்தான்குடி அல்-அக்ஸா வட்டார வேட்பாளர் எம்.ஜ.எம் ஜவாஹிர் (JP) அவர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சார காரியாலயம் திறந்து வைக்கும் நிகழ்வும் மக்கள் சந்திப்பும் நேற்று (18) இடம்பெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் கலந்து சிறப்பித்தார்.
அவர் இதன்போது உரையாற்றுகையில்,
காத்தான்குடி நகரத்தை இன்னும் அபிவிருத்தி செய்து கட்டியொழுப்பவேண்டிய தேவையிருக்கிறது.

மக்களின் தேவைகள் நிறைவு செய்யப்பட வேண்டும். அதற்காக எம்மால் முடிந்த அனைத்தையும் செய்துகொண்டிருக்கிறோம்.
அதேபோல் இன்னும் பல சிறந்த செயற்திட்டங்களை மேற்கொள்ள தயாராக இருக்கிறோம்.
அதற்காக உங்கள் முழுயான ஒத்துழைப்பு மற்றும் நகர சபையின் அதிகாரம் முழுமையான தேவைப்படுகிறது.

இதற்காக, பத்து வட்டாரங்களையும் வென்று போதாது அதற்காக ஏனைய சில கட்சிகளையும் இணைத்து செயற்பட தயாராக இருக்கிறோம் – என்றார்.
இந்நிகழ்வில், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்கள், காத்தான்குடி நகர சபை வேட்பாளர்கள், கட்சியின் மத்திய முழு உறுப்பினர்கள், ஊர்ப்பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.