Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஜனாதிபதியின் உரையை விமர்சிக்கத் தமிழ் மக்களை ஏமாற்றிய தமிழ்க் கட்சியினருக்கு எந்த அருகதையும் கிடையாது; பிமல் ரத்நாயக்க

ஜனாதிபதியின் உரையை விமர்சிக்கத் தமிழ் மக்களை ஏமாற்றிய தமிழ்க் கட்சியினருக்கு எந்த அருகதையும் கிடையாது; பிமல் ரத்நாயக்க

2 months ago
in அரசியல், செய்திகள்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் உரையை விமர்சிக்கத் தமிழ் மக்களை ஏமாற்றிய தமிழ்க் கட்சியினருக்கு எந்த அருகதையும் கிடையாது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வடக்கில் நேற்றுமுன்தினம்(17) நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் ஆற்றிய உரைகளைத் தமிழ்த் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.

ஜனாதிபதியின் உரையை விமர்சிக்கத் தமிழ் மக்களை ஏமாற்றிய தமிழ்க் கட்சியினருக்கு எந்த அருகதையும் கிடையாது. வடக்குக்குச் சென்ற ஜனாதிபதி, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்டே உரையாற்றியுள்ளார்.

அவரின் உரை தமிழ்க் கட்சியினருக்குத் தேர்தல் தோல்விப் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் அவர்கள் உளறுகின்றார்கள். தமிழ் மக்களின் எமக்கான ஆதரவைத் தமிழ்க் கட்சியினரால் தடுத்து நிறுத்த முடியாது.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவோ அல்லது அவர் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கட்சியினரோ ஒருபோதும் இனவாத, மதவாத அரசியலை ஆதரிக்க மாட்டார்கள்.

இனவாதத்தையும் மதவாதத்தையும் வைத்துத்தான் வடக்கிலும், தெற்கிலும் கடந்த காலங்களில் அரசியல் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதற்கு முடிவு கட்டும் வகையிலேயே தேசிய மக்கள் சக்தியை நாட்டு மக்கள் ஆட்சியில் அமர்த்தியுள்ளார்கள்.

வடக்கில் திஸ்ஸ விகாரையை வைத்து இனவாத அரசியலை முன்னெடுக்க எமது அரசு ஒருபோதும் அனுமதிக்காது. மத்தியில் ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தி, உள்ளூராட்சி சபைகளிலும் ஆட்சி அமைத்தால் அது நாட்டுக்கும் மக்களுக்கும் பெரும் நன்மைகளை ஏற்படுத்தும்.

ஏனெனில் ஊழல், மோடி இல்லாத ஒரே கட்சி தேசிய மக்கள் சக்தியே. இதை எமது ஜனாதிபதியும் எமது கட்சி உறுப்பினர்களும் வெளிப்படையாகச் சொல்வதில் என்ன தவறு இருக்கின்றது” என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கேள்வி எழுப்பினார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சம்மாந்துறையில் போக்குவரத்து சட்டங்களை மீறி பயணித்த மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
செய்திகள்

சம்மாந்துறையில் போக்குவரத்து சட்டங்களை மீறி பயணித்த மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

June 7, 2025
வீட்டுப்பாடம் செய்யாத காரணத்தால் மாணவியின் வாய்த்தாடையை உடைத்த ஆசிரியர்
செய்திகள்

வீட்டுப்பாடம் செய்யாத காரணத்தால் மாணவியின் வாய்த்தாடையை உடைத்த ஆசிரியர்

June 7, 2025
தமிழரசுக் கட்சி மட்டுமல்ல எந்த கட்சிக்கும் ஆதரவு கிடையாது; தேசிய மக்கள் சக்தி
அரசியல்

தமிழரசுக் கட்சி மட்டுமல்ல எந்த கட்சிக்கும் ஆதரவு கிடையாது; தேசிய மக்கள் சக்தி

June 7, 2025
கொழும்பு – புத்தளம் பிரதான வீதியில் வேன் மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலி
செய்திகள்

கொழும்பு – புத்தளம் பிரதான வீதியில் வேன் மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலி

June 7, 2025
ஆறு தொன் தங்கமும் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிரப்பட வேண்டும்; சபா குகதாஸ்
செய்திகள்

ஆறு தொன் தங்கமும் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிரப்பட வேண்டும்; சபா குகதாஸ்

June 7, 2025
மத்திய அதிவேக நெடுஞ்சாலையை கடவத்தையுடன் இணைக்கும் கட்டுமானப் பணிகள் ஆகஸ்ட் மாதம் ஆரம்பம்
செய்திகள்

மத்திய அதிவேக நெடுஞ்சாலையை கடவத்தையுடன் இணைக்கும் கட்டுமானப் பணிகள் ஆகஸ்ட் மாதம் ஆரம்பம்

June 7, 2025
Next Post
காத்தான்குடியை இன்னும் அபிவிருத்தி செய்யவே அதிகாரத்தை கேட்கிறோம்; ஹிஸ்புல்லாஹ்

காத்தான்குடியை இன்னும் அபிவிருத்தி செய்யவே அதிகாரத்தை கேட்கிறோம்; ஹிஸ்புல்லாஹ்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு