Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான வர்த்தமானி; உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள்

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான வர்த்தமானி; உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள்

2 years ago
in செய்திகள்

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான வர்த்தமானி; உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள்

வாகன இறக்குமதியாளர்களுக்கான திருத்தப்பட்ட புதிய விதிமுறைகள் தொடர்பான அறிவிப்பை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

குறித்த விதிமுறைகள், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் நேற்றையதினம்(27 வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கமைய, கடந்த வருடம் டிசம்பர் 18ஆம் திகதி முதல் இந்த வருடம் ஜனவரி 27ஆம் திகதி வரை இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டாளரின் விதிமுறைகளின் கீழ் கடன் கடிதங்கள்(LOC – Letter of Credit) வழங்கப்பட்ட வாகனங்களை விடுவிக்க இலங்கை சுங்கப் பணிப்பாளருக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், திருத்தப்பட்ட விதிமுறைகளுக்கமைய டிசம்பர் 18ஆம் திகதி முதல் ஜூலை 31ஆம் திகதி வரை வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

  1. வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டு 90 நாட்களுக்குள் மோட்டார் வாகனத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். வாகனத்தை பதிவு செய்யும் போது, இறக்குமதியாளர்கள் தங்கள் வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தையும்(TIN) சமர்ப்பிக்க வேண்டும்.
  2. மோட்டார் வாகனத் திணைக்களத்தில் பதிவு செய்யாத சொந்தத் தேவைக்கு வாகனம் வாங்கும் தனிநபர்கள், வருடத்துக்கு ஒரு வாகனத்தை மட்டுமே இறக்குமதி செய்வதற்கு அனுமதிக்கப்படுவர்.
  3. வாகன இறக்குமதியாளர்கள், 6 மாத காலத்திற்குள் தமக்கு அங்கீகரிக்கப்பட்ட ஒதுக்கீட்டில் இருந்து 25 சதவீதத்திற்கும் மேற்ப்பட்ட வாகனங்களை இறக்குமதி செய்திருப்பின், மூன்று வருட இறக்குமதித் தடையை எதிர்கொள்வார்கள்.
  4. விதிமுறைகளை மீறி இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள், 90 நாட்களுக்குள் இறக்குமதியாளர்களின் சொந்த செலவில் மீள் ஏற்றுமதி செய்யப்பட வேண்டும்.

மேற்குறிப்பிட்ட விதிமுறைகளின் கீழ் வரையறுக்கப்பட்ட வாகன இறக்குமதியை அனுமதிக்க அரசாங்கம் எதிர்ப்பார்ப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை
செய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை

September 7, 2026
யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு
செய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு

September 7, 2026
நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
Next Post
யாழ் பகுதியொன்றில் இயேசு சிலையின் காலிலிருந்து கசியும் நீர்

யாழ் பகுதியொன்றில் இயேசு சிலையின் காலிலிருந்து கசியும் நீர்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு