ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள அடுக்கு மாடிக் கட்டிடத்தில் நேற்று (03) சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் 4 பேர் பலியாகினர். இக் குண்டுவெடிப்பில் ரஷ்ய ஆதரவு படைக்குழுவின் தலைவர் ஆர்மென் சர்கிஸ்யானும் அவரது பாதுகாவலரும் பலியானதை ரஷ்யா உறுதிபடுத்தியுள்ளது.
ஆர்மென் சர்கிஸ்யான் உக்ரைன் அரசால் தேடப்படும் நபர். இவர் ரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதியான உக்ரைனின் டோனெட்ஸ்க்கில் படைப்பிரிவை நிறுவி அதன் தலைவராக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்ததக்கது.