பிரமிட் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடும் நிதி நிறுவனங்களுக்கு எதிராக இதுவரையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பிரமிட் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டு வருவதாக மத்திய வங்கியினால் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் மீது இதுவரையில் சட்ட மா அதிபர் திணைக்களமோ அல்லது குற்றப் புலனாய்வு திணைக்களமோ நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரமிட் கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெறுவதாக கடந்த 2011ஆம் ஆண்டில் மத்திய வங்கி சில நிறுவனங்கள் மீது குற்றம் சுமத்திய போதிலும், இதுவரையில் அந்த நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் கால தாமத நிலைமைகளினால் பலர் இந்த மோசடிகளில் சிக்கிக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தாலும் அந்த வழக்குகள் விசாரணை செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு நீண்ட காலம் செல்வதாக மத்திய வங்கியன் ஆளுநர் நந்தலால் வீரசிங்க அண்மையில் சுட்டிக்காட்டியிருந்தார்.