நாடளாவிய ரீதியில் நேற்று (21) உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலில் உயிரிழந்த உறவுகளுக்கு 06 ஆண்டு நினைவஞ்சலி அனுஷ்டிக்கப்பட்டது.
அந்த அடிப்படையில் மட்டுவாழ் இளைஞர்களின் ஏற்பாட்டிலும், சமூக ஆர்வலர் சி.அனோஜன் தலைமையிலும் நேற்று மாலை 06:00 மணியளவில் உயிர்த்த ஞாயிறு சீயோன் தேவாலய தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்த உறவுகளுக்கு மட்டு கல்லடிப் பாலம் அருகில் உள்ள அந்தோனியார் தேவாலயத்திற்கு முன்பாக அஞ்சலி நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது.

இதன் போது உயிர் நீத்த உறவுகளுக்காக கல்லடி டச்பார் இஞ்ஞாசியார் தேவலாய பங்கு தந்தை ஜோசப் மெரி விசேட ஆராதனைகளை நிகழ்த்தியிருந்ததுடன் , இதன் போது சமூக செற்பாட்டாளர் செல்வகுமார் உட்பட இளைஞர்கள், பொதுமக்கள் என பலர் இதில் கலந்து கொண்டு ஈகை சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
இதன் போது அங்கு கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்








