முக்கியஸ்தர்களின் வாகன போக்குவரத்துக்களை எளிதாக்குவதற்காக வீதி மூடல்களை நடைமுறைப்படுத்துவதில்லை என இலங்கை பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
கொழும்பில் உள்ள ஒரு வீதியை முக்கியஸ்தர்களின் வாகனத் தொடரணிக்கு வசதியாக பொலிஸார் மூடுவதைக் காட்டும் காணொளி வெளியாகியுள்ளமை தொடர்பிலேயே இலங்கை பொலிஸின் போக்குவரத்து பாதுகாப்பு பிரிவு பொறுப்பதிகார் இந்திக ஹப்புகொட இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
இந்தநிலையில், காணொளியில் காட்டப்பட்டது அண்மைய சம்பவம் அல்ல என்றும், அது பல ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்டவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.