கேரளா கஞ்சாவினை உடமையில் வைத்திருந்த இளைஞனை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று (04) இரவு அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலியார் வீதி பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன் கைது செய்யப்பட்டவர் 26 வயது மதிக்கத்தக்கவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி குறித்த பகுதியில் அண்மைக்காலமாக கேரளா கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், சந்தேக நபரிடம் இருந்து 1 மில்லி கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் மற்றும் சான்றுப் பொருட்கள் யாவும் நாளை (04) கல்முனை நீதிவான் நீதிமன்றில் சட்ட நடவடிக்கைக்காக ஆஜர்படுத்த கல்முனை தலைமையக பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அத்துடன் குறித்த சோதனை நடவடிக்கையானது கல்முனை பிராந்தியத்திற்கான உதவி பொலிஸ் அத்தியட்சகர் உதுமாலெவ்வை மஹ்மூத்கான் இப்னு அசாரின் வழிகாட்டலுக்கமைய கல்முனை தலைமைய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.ரம்சீன் பக்கீர் ஆலோசனைக்கமைய பொலிஸ் நிலைய ஊழல் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.