இலங்கை பிரஜைகளை மீட்பது தொடர்பான முக்கிய விடயங்கள் தொடர்பில், வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் நேற்று (04.02.2025) மியன்மார் துணைப் பிரதமர் உ தான் ஸ்வேவுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
இணையக்குற்ற மையங்களில் பணிபுரிய மியன்மாரில் உள்ள மியாவாடி பகுதிக்கு கடத்தப்பட்ட 18 இலங்கை பிரஜைகளை விரைவாக மீட்டு, பாதுகாப்பாக திருப்பி அனுப்புவதற்கு மியன்மார் அரசாங்கத்தின் அவசர உதவியை அமைச்சர் இதன் போது கோரியுள்ளார்.
ஏற்கனவே, பல்வேறு கட்டங்களில் மியன்மார் இணையக்குற்ற முகாம்களில் இருந்து பல இலங்கையர்கள் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.