வாகன மோசடி குறித்த இரகசிய தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனைகளில் கலவானையைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டதோடு, அவரிடம் இருந்த ஐந்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்ட்டது.
குறித்த சோதனையின் போது நடந்த ஒரு சிறப்பு சம்பவமாக, வாலானா பொலிஸ் அதிகாரிகள் தனது அடையாளத்தை வெளிப்படுத்தியபோது, சந்தேக நபரான ‘போல்கொட்டுவே கடா’ என்று அழைக்கப்படும் தொழிலதிபர் பயந்து மயக்கமடைந்து உடனடியாக விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்காரணமாக அவர், இரத்தினபுரி மருத்துவமனையில் பொலிஸாரால் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
‘போல்கொட்டுவே கடா’ என்று அழைக்கப்படும் குறித்த நபரிடம் கடந்த 2 ஆம் திகதி ஐந்து வாகனங்கள் மீட்க்கப்பட்டதோடு, அதில் இரண்டு கார்கள், இரண்டு ஜீப் வண்டிகள் மற்றும் ஒரு டிஃபென்டர் ரக வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு அறிவித்துள்ளது.
இதன் மொத்த மதிப்பு சுமார் ஏழு கோடி ரூபாய் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் நிலையத் உயர் தலைமை ஆய்வாளர் இந்திக வீரசிங்க கூறுகையில்,
“ பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் உரிமையாளர் போலி இயந்திர எண் மற்றும் சேசிஸ் எண்ணைப் பயன்படுத்தி போலி ஆவணங்களைத் தயாரித்து வாகனங்களை விற்பனை செய்வதன் மூலம் சட்டவிரோதமாக பணம் சம்பாதிப்பதில் ஈடுபட்டுள்ளார்.
கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களில் ஜப்பானில் தயாரிக்கப்பட்ட கால்டஸ் கார் ஒன்று இருந்தது. அது இயக்க முடியாத நிலையில் இருந்தது.
மேலும் மற்றுமொரு ஜப்பானிய காரின் சேசிஸ் பகுதியும் ஒருங்கினைக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக கவனிக்க வேண்டிய மற்றொரு விடயம் என்னவென்றால், இந்த தொழிலதிபர் “கல்வி அமைச்சகம்” மற்றும் “சாலை மேம்பாட்டு ஆணையம்” ஆகிய நிறுவனங்களின் பெயர்களைக் கொண்ட பலகைகளைக் சில வாகனங்களை ஓட்டியதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றார்.