சித்தரினால் ஸ்தாபிக்கப்பட்ட மட்டக்களப்பு செட்டிபாளையம் சோமகலாநாயகி சமேத சோமநாதலிங்கேஸ்வரர் ஆலயத்தின் மகா கும்பாபிசேகம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
இன்றைய தினம் கிரியைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் 07ஆம் 08ஆம் திகதிகளில் அடியார்கள் எண்ணெணைக்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெறவுள்ளது.
07ஆம் திகதி காலை 07மணி தொடக்கம் மாலை ஆறு மணி வரையிலும் 08ஆம் திகதி அதிகாலை 05மணி தொடக்கம் மாலை 05மணி வரையில் அடியார்கள் எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வில் பங்குகொள்ளலாம் என ஆலய நிர்வாகத்தினர் நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு செட்டிபாளையம் சோமகலாநாயகி சமேத சோமநாதலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினரின் ஊடக சந்திப்பு இன்று ஆலயத்தில் நடைபெற்றது.
எதிர்வரும் 09ஆம் திகதி ஆலயத்தின் மகா கும்பாபிசேகம் மற்றும் அதற்கு முந்தியதாக நடைபெறவுள்ள எண்ணெணைக்காப்பு கிரியைகள் தொடர்ந்து இங்கு விளக்கமளிக்கப்பட்டது.