மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்து வருகின்ற நிலையில் மாவட்டத்தில் அடிக்கடி உயிரிழப்புகளும் ஏற்படுகின்றது.
வாகரை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவு தோனிதாட்டமடு பகுதியில் விவசாயி ஒருவரை நேற்று முன்தினம் இரவு (4) காட்டு யானை தாக்கியதில் குறித்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
கதிரவெளி – புச்சாங்கேனியைச் சேர்ந்த கணபதிபிள்ளை மனோகரன் (வயது 60) 4 பிள்ளைகளின் தந்தை.
தன்னுடைய வயல் பகுதியில் காவலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில் யானை வயலுக்குள் உள்நுளைய முற்பட்ட வேளை யானைகளை துரத்திய போது காட்டு யானை தாக்கியதில் அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
வாகரை பகுதி திடீர் மரண விசாரணை அதிகாரி குறித்த பகுதிக்கு சென்று சடலத்தை பார்வையிட்டதும்.
சடலம் மீதான மேலதிக சட்ட வைத்திய பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதாரம் வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு பிரதேசம் மீதான பரிசோதனை முடிவடைந்ததும் சடலத்தை கையளிப்பதற்கான ஏற்பாடு நேற்று (5) செய்யப்பட்டுள்ளது.