இலங்கை தமிழரசு கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தேசிய பட்டியல் மூலம் தெரிவான வைத்தியர் ப.சத்தியலிங்கம் தொடர்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு முகப்புத்தகத்தில் செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் குறித்த முகப்புத்தகத்தில் தெரிவிக்கப்படுவதாவது,
2009.03.31 அன்று வணங்காமண் (கப்டன்அலி ) என்ற மனதாபிமான கப்பலில் பொருட்களை திருடிய சத்தியலிங்கம். இறுதி யுத்தம் தீவிரமடைந்திருந்த அந்தநாட்கள் பாரிய கொடுமையானவை. அதை உணர்ந்த எமது புலம் பெயர் தொப்புள் கொடிகள் அனுப்பிய 66 கொள்கலன்கள் அடங்கிய மருந்து, உணவு, குடிநீர், பானங்கள் உடைகள் என்பன கப்பல் பல்வேறு தடைகளை மீறி நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
அப்போது (SLRC) இலங்கை செஞ்சிலுவை சங்கம் முக்கியஷ்தரான சத்தியலிங்கமே சுகாதார அதிகாரியாகவும் பணியாற்றினார்.
நலன்புரி நிலையங்களுக்கு இந்தப்பொருட்கள் சென்றுசேராமல் கற்குழி தோணிக்கல் பகுதியில் உள்ளவீடுகளில் சத்தியலிங்கத்தால் பதுக்கப்பட்டன.
மருந்துப்பொருட்கள் நாட்டின் தனியார் மருந்தகங்களுக்கு விற்கப்பட்டன. கப்பலில் வந்த வெளிநாட்டு நுளம்புவலைகள் மக்கள் பயன்படுத்தாமல் கடைகளில் தொங்கின.
அதிஉயர் விசுக்கோத்துவகைகள் சத்தியலிங்கத்தின் உறவினர், நண்பர் விடுகளுக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டன. மிகுதி கடைகளுக்கு விற்பனையாகின. இவற்றின் விநியோகப்பணிக்காக சம்பளம் கொடுத்து நியமிக்கப்பட்ட சிறுமிகளுக்கு சாக்களேட்டுகள் பரிசளிக்கப்படன.
புதுபுடவைகள் மொத்தவிலைக்கு வவுனியா புடைவைகடைகளுக்கு விற்கப்பட்டன.
மக்கள் வாழ்வா சாவா என இருந்த காலத்தில் அகதிகளை பசிதீர்த்த திருட்டு ஆசாமி இவர்
தற்போது தேசியப்பட்டியல் வாய்ப்பை சட்டவிரோதமாக பாவித்து, மாவை சேனாதிராஜா ஐயாவின் வாய்ப்பைப்பறித்து, இன்று அவரை மரணமடையச்செய்த பிசாசுதான் சத்தியலிங்கம்.
இம்முறை மக்கள் தேர்தலின் மூலம் நல்ல பாடம் புகட்டியும் திருந்த வில்லை. பாராளுமன்றில் அரசுக்கு குழல் ஊதி உள்ளுரில் தமிழ்தேசியம் என்று மக்களை திசைதிருப்புகிறார். இவரது கோவைகள் புரட்டப்படுகிறன.
என்று சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.