சமீபத்தில் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட 2024 YR4 என்ற சிறுகோள் பூமியைத் தாக்கும் அபாயம் சற்று அதிகரித்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
கூடுதல் அவதானிப்புகள் மற்றும் பகுப்பாய்வுகள் மூலம் குறித்த சிறுகோள், டிசம்பர் 22, 2032 அன்று பூமியுடன் அதன் மோதல் நிகழ்தகவு 2.3% ஆக அதிகரித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
அத்தோடு, அவதானிப்புகள் ஏப்ரல் வரையிலும் சிறுகோள் இன்னும் தெரியும் வரை தொடரும் எனவும் 2028 ஜூன் வரை கவனிக்க முடியாத அளவுக்கு மங்கலாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
![](https://battinaatham.net/wp-content/uploads/2025/02/image-348.png)
இந்த சிறுகோள் 2024 டிசம்பரில் சிலியில் அமைந்துள்ள வளிமண்டல தாக்க ஆரம்ப எச்சரிக்கை அமைப்பு (ATLAS) தொலைநோக்கி மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.
சிறுகோளின் அளவை சிறப்பாக மதிப்பிடுவதற்காக 2025 மார்ச் மாதம் வரை நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தற்போது அதன் அளவு 130-300 அடி அகலம் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவுமு் கூறப்படுகிறது.
இந்ந நிலையில், நாசாவின் NEO ஆய்வுகள் மையத்தின் (CNEOS) தகவலின் படி, இது 2032 டிசம்பர் 22 அன்று சுமார் 66,000 மைல் வேகத்தில் பூமியை நெருங்கும் என மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.