Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஈரானின் அரச தொலைக்காட்சி தலைமையகம் மீது இஸ்ரேல் தாக்குதல்

ஈரானின் அரச தொலைக்காட்சி தலைமையகம் மீது இஸ்ரேல் தாக்குதல்

12 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இஸ்ரேல் – ஈரான் இடையேயான போர்ப்பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரான் அரச தொலைக்காட்சி நிலைய தலைமையகத்தின் மீது மீது படையினர் நேற்றையதினம் (16) வான்வழித் தாக்குதலை நடத்திய நிலையில்,குறித்த தாக்குதலின் போது ஸ்டுடியோவிலிருந்து செய்தி வாசிப்பாளர் பதற்றமடைந்து ஓடும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போர் பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில்,ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ஈரான் அரச தொலைக்காட்சி ஒளிபரப்பு கட்டிடத்தின் மீது இஸ்ரேலிய ஜெட் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளன.

இதன்போது ஒளிபரப்பின் நடுவில் ஸ்டுடியோவிலிருந்து பெண் செய்தி வாசிப்பாளர் எழுந்து ஓடும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

குறித்த பெண் செய்தி வாசிப்பாளர் இஸ்ரேலுக்கு எதிராக நேரடி ஒளிபரப்பில் விமர்சனத்தை வெளியிட்டுக் கொண்டிருக்கும் போது, இந்த தாக்குதல் இடம்பெற்றதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதனையடுத்து, அவர் ஒளிபரப்பை விட்டு வெளியேறும் காட்சியைக் காண முடிந்தது.

இந்த சம்பவத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு, தொலைக்காட்சி நிலையங்கள் அமைந்துள்ள தெஹ்ரானின், குறித்த பகுதியை விட்டு வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewspoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

30 ஆண்டு சட்டப் போராட்டத்தில் தாய்க்கு வெற்றி; வீட்டின் உரிமை தாய்க்கே என நீதிமன்றம் தீர்ப்பு
செய்திகள்

30 ஆண்டு சட்டப் போராட்டத்தில் தாய்க்கு வெற்றி; வீட்டின் உரிமை தாய்க்கே என நீதிமன்றம் தீர்ப்பு

June 9, 2026
விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமில்லை; ஆனந்த விஜேபால
செய்திகள்

விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமில்லை; ஆனந்த விஜேபால

June 9, 2026
வலுவடையும் டொலரின் மதிப்பு; ரூ. 342 ஐ தாண்டிய விற்பனை விலை!
செய்திகள்

வலுவடையும் டொலரின் மதிப்பு; ரூ. 342 ஐ தாண்டிய விற்பனை விலை!

June 9, 2026
50 ஆண்டுகளாக தொடரும் உரிமைப் போராட்டம்; தீர்வு இல்லை என குற்றச்சாட்டு!
செய்திகள்

50 ஆண்டுகளாக தொடரும் உரிமைப் போராட்டம்; தீர்வு இல்லை என குற்றச்சாட்டு!

June 9, 2026
கல்முனை வலய மட்ட செஸ் போட்டியில் சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை மாணவர்கள் அசத்தல் சாதனை
செய்திகள்

கல்முனை வலய மட்ட செஸ் போட்டியில் சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை மாணவர்கள் அசத்தல் சாதனை

June 9, 2026
எரிபொருளுடன் மேலும் இரு கப்பல்கள் இலங்கைக்கு; விநியோகத்திற்கு வலுசேர்ப்பு!
செய்திகள்

எரிபொருளுடன் மேலும் இரு கப்பல்கள் இலங்கைக்கு; விநியோகத்திற்கு வலுசேர்ப்பு!

June 9, 2026
Next Post
2004 – 2008 காலப்பகுதியில் ஜனாதிபதி நிதி பெற்றவர்களின் பட்டியல் வெளியிடக்கோரி கோரிக்கை

2004 – 2008 காலப்பகுதியில் ஜனாதிபதி நிதி பெற்றவர்களின் பட்டியல் வெளியிடக்கோரி கோரிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு