Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சர்வதேச தடை ஏற்படும் அபாயம்; சிவில் செயற்பாட்டாளர் எச்சரிக்கை!

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சர்வதேச தடை ஏற்படும் அபாயம்; சிவில் செயற்பாட்டாளர் எச்சரிக்கை!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சர்வதேச அளவில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு தடை விதிக்கப்படும் நிலை ஏற்படும் அபாயம் காணப்படுவதாக சிவில் செயற்பாட்டாளர் தினேஷ் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.

சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பான ICAO முன்னெடுத்துவரும் தணிக்கை மற்றும் விசாரணைகளின் அடிப்படையிலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிவில் விமான சேவைகள் அதிகார சபையில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் பல்வேறு முறைகேடுகள் தொடர்பிலும் குறித்த நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

உலகளாவிய விமானப் போக்குவரத்துத் துறையில் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறைகளை உறுதிப்படுத்தும் நோக்கில் ICAO செயல்பட்டு வருவதாகவும், அதன் உறுப்பு நாடுகள் சர்வதேச விதிமுறைகள் மற்றும் தரநிலைகளுக்கு அமைவாக தமது விமானப் போக்குவரத்து நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒவ்வொரு நாட்டிலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் விமானப் போக்குவரத்து தொடர்பான சட்டங்கள், விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள் சர்வதேச தரநிலைகளுக்கு அமைவாக பேணப்படுகின்றனவா என்பதை மதிப்பீடு செய்வதற்காக தணிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டுக்கான தணிக்கையின் முதற்கட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதன்போது இலங்கையின் விமானப் போக்குவரத்துத் துறையிலும் பல்வேறு குறைபாடுகள் மற்றும் முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தினேஷ் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த தணிக்கை நடவடிக்கைகளில் ஸ்ரீலங்கன் விமான சேவை எதிர்பார்க்கப்பட்ட தரநிலைகளை பூர்த்தி செய்யத் தவறியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலை தொடருமானால், சர்வதேச அளவில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு கடுமையான கட்டுப்பாடுகள் அல்லது தடை விதிக்கப்படும் அபாயம் உருவாகக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மண்சரிவு அபாயத்தில் வாழ்ந்த 51 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்!
செய்திகள்

மண்சரிவு அபாயத்தில் வாழ்ந்த 51 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்!

September 28, 2026
திலீபன் சிலை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்!
காணொளிகள்

திலீபன் சிலை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்!

September 28, 2026
குற்றவாளியாக பெயரிடப்பட்டார் நாமல்!
செய்திகள்

குற்றவாளியாக பெயரிடப்பட்டார் நாமல்!

September 28, 2026
மட்டக்களப்பில் பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞன்- விசாரணையில் முன்னேற்றமில்லை!
செய்திகள்

மட்டக்களப்பில் பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞன்- விசாரணையில் முன்னேற்றமில்லை!

September 28, 2026
காட்டு யானைகளுக்கு உணவு வழங்கினால் சட்ட நடவடிக்கை
செய்திகள்

காட்டு யானைகளுக்கு உணவு வழங்கினால் சட்ட நடவடிக்கை

September 28, 2026
டுபாயில் போதைப்பொருள் வலையமைப்பு; இலங்கையில் இருந்து இயக்கியதாகக் கூறப்படும் இளைஞர் கைது!
செய்திகள்

டுபாயில் போதைப்பொருள் வலையமைப்பு; இலங்கையில் இருந்து இயக்கியதாகக் கூறப்படும் இளைஞர் கைது!

September 28, 2026
Next Post
அக்கரைப்பற்று பிரதேச சபையின் புதிய உதவித் தவிசாளராக எம்.எச். சுபைதா உம்மா பதவிப் பிரமாணம்

அக்கரைப்பற்று பிரதேச சபையின் புதிய உதவித் தவிசாளராக எம்.எச். சுபைதா உம்மா பதவிப் பிரமாணம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு