ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தீர்மானங்களால் தங்களது உரிமைகள் மறுக்கப்படும் என்ற அச்சத்தில் முஸ்லிம் மக்கள் இருப்பதாக சமூக செயற்பாட்டாளர் சிராஸ் யூனுஸ் தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்திக்கு நாடு முழுவதும் உள்ள முஸ்லிம் மக்கள் வாக்களித்து அந்த கட்சியை வெற்றிபெற வைத்திருந்தனர்.

இந்நிலையில், தற்போது தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தமை தொடர்பில் முஸ்லிம் மக்கள் வெட்கப்படுவதாக சிராஸ் யூனுஸ் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்களுக்கு அமைச்சரவையில் இடமில்லை எனில், அவர்களது உரிமைகளும் மறுக்கப்படும் அபாயம் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.