மியன்மாரின் சைபர் குற்ற முகாம்களில் தடுத்து வைக்கப்பட்ட 13 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்டவர்களில் 11 ஆண்களும் 2 பெண்களும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மியன்மாரின் சைபர் குற்றச் செயல் முகாம்களில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 17 இலங்கையர்கள் 13 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

ஏனைய நான்கு பேரையும் விடுவிப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
20 முதல் 30 வயதானவர்கள் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விடுவிக்கப்பட்டவர்கள் தாய்லாந்து எல்லைப் பகுதியிலிருந்து பாங்கொக்கெக்கில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகம் நோக்கி அழைத்து வரப்பட உள்ளதாகவும் பின்னர் அவர்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
தொழில் வாய்ப்பு வழங்குவதாகக் கூறி ஏமாற்றி அழைத்துச் செல்லப்பட்ட இலங்கையர்கள் உள்ளிட்டவர்கள் மியன்மாரில் சைபர் குற்றச் செயல்களில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாகவும், இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு இலக்காக நேரிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.