Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாகன இறக்குமதிக்கு கடன் கடிதங்களை ஏற்க மறுக்கும் ஜப்பானிய முன்னணி வங்கிகள்; இலங்கை இறக்குமதியாளர்கள் சங்கம் சுட்டுக்காட்டு

வாகன இறக்குமதிக்கு கடன் கடிதங்களை ஏற்க மறுக்கும் ஜப்பானிய முன்னணி வங்கிகள்; இலங்கை இறக்குமதியாளர்கள் சங்கம் சுட்டுக்காட்டு

2 years ago
in செய்திகள்

வாகனங்களை இறக்குமதி செய்யும் போது ஜப்பானின் முன்னணி வங்கிகள் எதுவும் இலங்கையின் கடன் கடிதங்களை ஏற்றுக்கொள்வதில்லை என இலங்கை இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வாகன இறக்குமதியில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு அரசாங்கம் அவசரமாகத் தீர்வுகளை வழங்க வேண்டும் என்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பதி மெரெஞ்சிகே தெரிவித்துள்ளார்.

அதேசமயம் சுமார் 5 ஆண்டுகளாகத் தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டிருந்த தனியார் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படும் வாகனங்களை முதலாம் திகதி முதல் மீண்டும் இறக்குமதி செய்ய அனுமதிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இங்கு, தனிப்பட்ட பயன்பாட்டிற்காகப் பயன்படுத்தப்படும் மகிழுந்துகள் மற்றும் வேன்கள், பொதுப் போக்குவரத்திற்குப் பயன்படுத்தப்படும் பேருந்துகள், பொருட்களைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்படும் வாகனங்கள், சிறப்பு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் வாகனங்கள், முச்சக்கர வண்டிகள், உந்துருளிகள் மற்றும் மோட்டார் இயந்திரங்களைப் பயன்படுத்தாத பிற பொருட்களை இறக்குமதி செய்ய அதிவிசேட வர்த்தமானி மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதி தடை நீக்கம் குறித்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, இது “மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையுடனும்” மேற்கொள்ளப்பட்டதாகக் கூறியமை குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அனோஜன் வழக்கு – பெற்றோரை நேரில் சந்தித்த ஜனாதிபதி, பொதுமன்னிப்புக்கு முழு ஆதரவு உறுதி!
செய்திகள்

அனோஜன் வழக்கு – பெற்றோரை நேரில் சந்தித்த ஜனாதிபதி, பொதுமன்னிப்புக்கு முழு ஆதரவு உறுதி!

September 21, 2026
குறைந்த அழுத்தப் பிரதேசம் தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்!
செய்திகள்

குறைந்த அழுத்தப் பிரதேசம் தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்!

September 21, 2026
மட்டக்களப்பில் சட்டவிரோதமாக T-56 துப்பாக்கி வைத்திருந்தவருக்கு ஆயுள் தண்டனை!
செய்திகள்

மட்டக்களப்பில் சட்டவிரோதமாக T-56 துப்பாக்கி வைத்திருந்தவருக்கு ஆயுள் தண்டனை!

September 21, 2026
உயர் கல்வித் தகுதி பெற்ற இளைஞர்களின் வேலையின்மை; ஆசியாவில் இலங்கை முதலிடம்!
செய்திகள்

உயர் கல்வித் தகுதி பெற்ற இளைஞர்களின் வேலையின்மை; ஆசியாவில் இலங்கை முதலிடம்!

September 21, 2026
அனோஜனின் பெற்றோரை சந்தித்தார் சஜித் – விடுதலைக்கு உதவவும் உறுதி!
செய்திகள்

அனோஜனின் பெற்றோரை சந்தித்தார் சஜித் – விடுதலைக்கு உதவவும் உறுதி!

September 21, 2026
புற்றுநோயாளிகளுக்கான அத்தியாவசிய தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு; ஜனாதிபதியிடம் அவசர கோரிக்கை!
செய்திகள்

புற்றுநோயாளிகளுக்கான அத்தியாவசிய தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு; ஜனாதிபதியிடம் அவசர கோரிக்கை!

September 21, 2026
Next Post
துப்பாக்கி காணாமல்ப் போன சம்பவத்தில் கடற்படை சிப்பாய் கைது

துப்பாக்கி காணாமல்ப் போன சம்பவத்தில் கடற்படை சிப்பாய் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு