“சுத்தமான கடற்கரை கவர்ந்திழுக்கும் சுற்றுலா தளம்” எனும் தொணிப் பொருளில், ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்களின் கிளீன் சிறிலங்கா தேசிய வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஓர் அம்சமாக மேற்படி நிகழ்சி திட்டத்தினை மட்டக்களப்பு மாவட்டத்தில் பாசிக்குடா கடற்கரையை சுத்தம் செய்யும் பணி முன்னெடுக்கப்பட்டது.
கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ஜெயானந்தி திருச்செல்வம் இதனை ஆரம்பித்து வைத்தார். பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.கங்காதரன், சுற்றுலாதுறை விடுதி உத்தியோகத்தர் எம்.எச்.மாஹிர் ஆகியோர்கள் இவ் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பாசிக்குடா கடற்கரையில் காணப்பட்ட பிளாஸ்ரிக் பொருட்கள், ஏனைய உக்கக் கூடிய, உக்காத கழிவுப் பொருட்கள், சுற்றுலா பயணிகளுக்கு இடையூறாகவுள்ள போக்குவரத்து பாதைகளில் காணப்பட்ட புற்கள் மற்றும் பற்றைகள் என்பன துப்பரவு செய்யப்பட்டு சுத்தம் செய்யப்பட்டன.

இந் நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சுற்றுலா விடுதி ஊழியர்கள், கல்குடா பொலிசார், பாசிக்குடா, வாழைச்சேனை மாதர் சங்க உறுப்பினர்கள், விளையாட்டு கழகங்கள் மற்றும் கோறளைப்பற்று பிரதேச சபையின் ஊழியர்களும் பங்குபற்றியிருந்தனர். நேற்றைய (16) இவ் நிகழ்சி திட்டத்தின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடற்கரையை அண்மித்த 23 பிரதேசங்களில் சுத்தம் செய்யும் பணி முன்னெடுக்கப்பட்டது.



