மட்டக்களப்பு – கடுக்காமுனை கிராமத்தில் வீட்டில் தாயுடன் உறக்கத்திலிருந்த ஒன்றரை மாதமான குழந்தை இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவமானது நேற்றுமுன்தினம் (17) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
கடந்த (16) ஆம் திகதி இரவு தாயாரிடம் பால் அருந்திவிட்டு குழந்தையும் தாயும் தமது வீட்டில் உறக்கியுள்ளனர்.

மறுநாள் திங்கள் கிழமை (17) அதிகாலை குழந்தைக்கு பால் கொடுப்பதற்காக எழுப்பிய போது குழந்தை மூச்சு சுவாசம் இல்லாமல் இருந்துள்ளது.
உடனடியாக வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது, குழந்தை முன்னரே இறந்து விட்டதாக வைத்தியர் தெரிவித்துள்ளார்.
இதன்போது, பிரேத பரிசோதனையில் இறப்புக்கான காரணம் கண்டுபிடிக்கபடாததால் உடல்கூறுகள் மேலதிக பரிசோதனைக்காக பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
இந்தநிலையில் ,குழந்தையின் உடல் உறவினர்களிடம் நேற்று (18) ஒப்படைக்கப்பட்டுள்ளது.