மட்டக்களப்பு, திருமலை பிரதான வீதியில் சற்று முன்னர் (19) விபத்து சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
ஏறாவூரிலிருந்து மட்டக்களப்பு நகர் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியின் முன் பக்கம் உள்ள டயர் ஊரணி பகுதியில் வைத்து திடீரென வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த நிலையில் முச்சக்கர வண்டியில் பயணித்த சாரதி, பாடசாலை சிறுமி மற்றும் மூன்று பெண்கள் உட்பட ஐவர் காயமடைந்த நிலையில் துரித சேவை ஆம்புலன்ஸ் வண்டியில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
அதேசமயம் சம்பவ இடத்துக்கு வந்த மட்டக்களப்பு தலைமையக போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மெற்கொண்டு வருகின்றனர்.


