கணே முல்லே சஞ்சீவ மீது துப்பாக்கசிசூடு நடத்திய சந்தேக நபரை இன்று (19) புத்தளம் பாலாவி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,
கணேமுல்ல சஞ்சீவ எனப்படும் சஞ்சீவ குமார சமரரத்னவின் கொலை குறித்து விசாரணை நடத்தி வரும் பொலிஸார் தற்போது வழக்கறிஞர் வேடத்தில் வந்து கொலை செய்த நபரை கைது செய்துள்ளனர்.

34 வயதுடைய முகமது அஸ்மான் ஷெரிப்தீன் எனப்படும் முன்னாள் கொமொண்டோபடையணியின் முன்னாள் படைச்சிப்பாய் எனத் தெரியவந்துள்ளது. வானில் பயணித்த நிலையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதன்படி குறித்த முக்கிய சந்தேக நபர் கடந்த மாதம் 7 ஆம் திகதி கல்கிஸ்ஸை, வட்டரப்பல பகுதியில் இரண்டு பேரை சுட்டுக் கொன்ற அதே துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என்று பொலிஸார் கூறுகின்றனர்.
