கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இந்த நாட்களில் ஒரு இளநீரின் விலை 300 ரூபாயைத் தாண்டியுள்ளதாக நுகர்வோர் கூறுகின்றனர்.

சிறிய அளவிலான இளநீர் 200 முதல் 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும், நிலவும் அதிக வெப்பம் காரணமாக இளநீருக்கான தேவை அதிகரித்ததே இந்த விலை உயர்வுக்குக் காரணம் என்று சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, சந்தையில் ஒரு தேங்காய் விலை 200 ரூபாயைத் தாண்டியுள்ளது.