அரச சேவையில் 2,003 வெற்றிடங்களுக்காக ஆட்சேர்ப்பு செய்வதற்கான விதந்துரை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, 11 அமைச்சுக்களின் கீழுள்ள நிறுவனங்கள் மற்றும் 05 மாகாண சபைகளில் நிலவும் 4,987 வெற்றிடங்களில் 2,003 வெற்றிடங்களுக்காக ஆட்சேர்ப்பு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேற்குறித்த விதந்துரையை நடைமுறைபடுத்துவதற்காக நேற்று முன்தினம்(19) நடைபெற்ற அமைச்சரவையில் பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அங்கீகாரம் வழங்கபட்டுள்ளது.

அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யும் செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் ஆளணி முகாமைத்துவத்துக்கான விதந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக பிரதமரின் செயலாளர் தலைமையில் நியமிக்கப்பட்ட அலுவலர் குழுவின் இரண்டாவது அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.