இந்த நாட்டில் விதிக்கப்பட்டிருந்த வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், முச்சக்கர வண்டிகள் இறக்குமதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பிரதான முச்சக்கர வண்டி விற்பனை நிறுவனமான டேவிட் பீரிஸ் மோட்டார் நிறுவனம், பஜாஜ் முச்சக்கரவண்டிகளுக்கான முன்கூட்டிய ஆர்டர்களை ஏற்றுக்கொள்ளும் வகையில் விளம்பரங்களை வெளியிட்டுள்ளது.

அதன் அடிப்படையில் பெறுமதி வரி சேர்க்கப்படும் போது ஒரு மூன்று சக்கர வண்டியின் விலை ரூ.19,950,225 என தெரிவிக்கப்படுகிறது.