இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு, வியாழக்கிழமை (20) பாராளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
சுமார் ஒரு மணித்தியாலம் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாகவும் இது தொடர்பில் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவில், ‘ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் சிறந்த கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
அமெரிக்க – இலங்கை உறவு நமது இரு நாடுகளையும் எவ்வாறு பலப்படுத்துகிறது என்பது பற்றி கலந்துரையாடப்பட்டது. ‘ எனக் குறிப்பிட்டுள்ளார்.