வெடிமருந்துகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடித்தல், செல்லுபடியாகாத மீன்பிடி பத்திரத்துடன் சட்டவிரோத மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்தல் மற்றும் இரவு நேர சுழியோடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 17 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினரால் கடந்த 13 முதல் 19 வரை கொக்கடி, நந்திக்கடல், முல்லைத்தீவு, ஆனவாசல், சின்னபாடு மற்றும் கடைக்காடு ஆகிய கடற்பகுதிகளிலும், கடற்பரப்புகளிலும் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து, 12 மீன்பிடி படகுகள், மோட்டார் சைக்கிலொன்று மற்றும் 156 சட்டவிரோத மீன்பிடி வலைகள், 184 கடலட்டைகள் மற்றும் 22 சங்குகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை ஒடுக்கும் வகையில், சட்டப்பூர்வ மீன்பிடி நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 18 முதல் 58 வயதுக்குட்பட்ட முல்லைத்தீவு, புத்தளம், கல்பிட்டி, கொட்டாந்தீவு, தோப்பூர் மற்றும் முள்ளியான் ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் ஆவர்.

