உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கைகளில் முரண்பாடு உள்ளதாக சமூக மற்றும் சமய நடுநிலையம் தெரிவித்துள்ளது.
நேற்று (20) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ள சமூக மற்றும் சமய நடுநிலையம் மேலும் தெரிவித்துள்ளதாவது.
சமூக மற்றும் சமய நடுநிலையம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் கொல்லப்பட்டவர்கள் குறித்த பல்வேறு புள்ளிவிபரங்களை பெற்றுள்ளது.
மேல் நீதிமன்ற வழக்குகள், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, பொலிஸ் தரப்பு, நினைவேந்தல் நிகழ்வுகள்மற்றும் நீதவான் நீதிமன்றின் முன்னால் உள்ள தனிநபர் வழக்குகள் போன்றவற்றிலிருந்து இந்த புள்ளிவிபரங்கள் பெறப்பட்டுள்ளன.
உயிர்த்த ஞாயிறுதாக்குதல் இடம்பெற்று சில மாதங்களின் பின்னர் பொலிஸார் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் 277 பேர் கொல்லப்பட்டனர் என இந்த தாக்குதல் குறித்து விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கு தெரிவித்தனர்.

எந்த எந்த இடங்களில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பதையும் அவர்கள் குறிப்பிட்டனர்.
அதன் பின்னர் 2021 ஜனாதிபதி விசாரணை ஆணைகுழுவும்,உயர்நீதிமன்றங்கள் 2022 இல் வழங்கிய தீர்ப்பிலும் குறைவான எண்ணிக்கையே குறிப்பிடப்பட்டது.
இதன்காரணமாக கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதாக தோன்றியது.
எனினும் ஏன் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது என்பதற்கான உத்தியோகபூர்வ விளக்கங்கள் இதுவரை வழங்கப்படவில்லை.மேலும் ஆரம்ப பட்டியலில் இருந்து யார் யாரின் பெயர்கள் அகற்றப்பட்டன என்ற விபரத்தையும் வெளியிடவில்லை.
உயிர்த்தஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் பட்டியலில் இடம்பெறாதவர்களின் குடும்பத்தவர்கள் இழப்பீடுகளை வழங்குவதற்காக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில்இருந்து புறக்கணிக்கப்பட்டிருப்பார்கள் அல்லது தவிர்க்கப்பட்டிருப்பார்கள் என நாங்கள் கரிசனை கொண்டுள்ளோம்.

எதிர்காலத்திலும் இழப்பீடு வழங்கும் செயற்பாடுகள் அவர்கள் உள்வாங்கப்படாத நிலை நீடிக்கலாம்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் குறித்த புள்ளி விபரங்களையும் பெயர்பட்டியலையும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஆராய வேண்டும். சரியான புள்ளிவிபரங்களை பொதுமக்களிற்கு வெளியிடவேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக காயமடைந்திருந்து பின்னர் கொல்லப்பட்டவர்களின் விபரங்களையும் இணைக்க வேண்டும் மேலும் தாக்குதல் காரணமாக கொல்லப்பட்டவர்கள், குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவர்கள், பொலிஸ் நடவடிக்கைகளில் கொல்லப்பட்டவர்களின் புள்ளிவிபரங்களையும் தனியாக குறிப்பிடவேண்டும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை
மேல்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளில் ஒவ்வொரு சம்பவத்திலும் இடம்பெற்ற எண்ணிக்கைகளை தனித்தனியாக வெளியிட்டதன் அடிப்படையில் ஒட்டுமொத்தமாக 267 போல தோன்றுகின்றது ஆனால் நீதிமன்ற தீர்ப்பில் 268 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு வழங்கியுள்ள புள்ளிவிபரங்களின் படி 276 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜனாதிபதி ஆணைக்குழு 194- 210 வது பக்கங்களில் 276 எனவும்,527 பக்கத்தில் 271 எனவும் குறிப்பிடுகின்றது.
சமூக மற்றும் சமயநடுநிலையம் ஒவ்வொரு இடத்திலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை பெற்றுக்கொண்டுள்ளது.

ஒட்டுமொத்த உயிரிழப்பு
பல்வேறு தரப்பபுகள் தெரிவித்த எண்ணிக்கையை வைத்து பார்க்கும்போது 56 வித்தியாசப்படுகின்றது.
அரச தரப்பிலிருந்து கிடைக்கப்பெற்ற புள்ளிவிபரங்களின் அடிப்படையில் இந்த வித்தியாசம் 18 ஆக காணப்படுகின்றது.
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முரணாண அறிக்கையில் காணப்படும் வித்தியாசம் ஐந்து