இந்த நாட்டிலுள்ள மருந்துகள் விநியோகஸ்தர்களில், எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவரின் மருமகனுக்கு சொந்தமான நிறுவனமே சுகாதார அமைச்சுக்கு அதிகளவான குறைபாடுள்ள மருந்துகளை வழங்கியுள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.
இதன்படி, கடந்த காலங்களில் வழங்கப்பட்ட மருந்துகளில் 10% – 24% குறைபாடுள்ளவை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த காலத்தில் இந்நிறுவனம் வழங்கிய கணிசமான எண்ணிக்கையிலான மருந்துகள் தரமற்றவை.
2015-2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சுகாதார அமைச்சுக்கு அவர்கள் வழங்கிய மருந்துகளை ஆராயும் போது இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கீழே தரப்பட்டுள்ள அட்டவணையில் குறித்த நிறுவனம் மருந்துகளை வழங்கிய ஆண்டு, வழங்கப்பட்ட மருந்துகள், அதில் தோல்வியடைந்தவை சதவீதம் என முறையே வழங்கப்பட்டுள்ளது.
அதாவது 2015ம் ஆண்டு 70 மருந்துகள் கொண்டு வரப்பட்டால் அதில் 7 மருந்துகள் தரமற்றவை அதாவது 10.0% என கணிக்கப்பட்டுள்ளது.
இந்தளவு தோல்வியடைந்த மருந்து விநியோக நிறுவனமா இதுவரை மருந்துகளை விநியோகித்தது என்பதும், மறுபுறம், அவர் தனது உறவினர் நிறுவனத்தின் மருந்துகளின் சார்பாக சுகாதார அதிகாரிகளை முறைகேடாக பாதிக்கும் வகையில் பேரம் பேசும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்தும் கடும் சிக்கலாக சந்தேகமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.