வெளிநாடுகளுக்கு செல்வதற்காக விமான நிலையத்திற்கு செல்லும் இளைஞர்களை அச்சுறுத்தி கப்பம் பெற்று வரும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரி உள்ளிட்ட குழுவினர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இந்த குழுவினரின் செயல் காரணமாகவே அண்மையில் தென் கொரியா சென்ற தொழிலாளர்களின் விமானப் பயணம் தாமதமானதாகக் கூறப்படுகிறது.
இந்த குழுவினர் ஒரு பயணியிடம் 100 முதல் 200 டொலர்கள் வரை கப்பமாக பெற்றுக்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.சுற்றுலா விசாவில் வெளிநாடு செல்லும் இளைஞர்களை இலக்கு வைத்தே இவர்கள் கப்பம் பெற்று வருவதாக தெரியவருகிறது.